இன்றைய தங்கம் விலைஎவ்வளவு? சமீபத்தில் குறைந்த விலை, தங்கத்தின் மேல் தயக்கத்தில் முதலீட்டாளர்கள்..!!

Uncategorized

பெண்களுக்கு மிகவும் பிடித்தது உடை அதன் பிறகு தங்கம் தான்.சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 36ரூபாயும், சவரணுக்கு 288 ரூபாயும் குறைந்துள்ளது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,630க்கும், சவரண் ரூ.37,040க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்றைய தங்கம் விலைஎவ்வளவு? சமீபத்தில் குறைந்த விலை, தங்கத்தின் மேல் தயக்கத்தில் முதலீட்டாளர்கள்..!!

இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 36 ரூபாய் அதிகரித்து ரூ4,666ஆகவும், சவரணுக்கு ரூ.288 அதிகரித்து ரூ.37,328க்கும் விற்கப்படுகிறது.கடந்த 2 வாரங்களாகவே தங்கம் விலையில் பெரும் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த வாரத்தில்கூட கடந்த 4 நாட்களில் 3 முறை விலை உயர்ந்தது, ஒருமுறை விலை குறைந்துள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பை எதிர்பார்த்துதான் சர்வதேச சந்தை, உலக நாடுகள் காத்திருக்கின்றன. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுவதால், தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமும் இருந்து வருகிறது. கடந்த 3 வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,500 வரை குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை திடீரெனச் சரிந்து, சவரன் ரூ.37,040 வரை குறைந்தது இதனால் தங்கம் விலை ரூ.37ஆயிரத்துக்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் திடீரென இன்று சவரனுக்கு, ரூ.288 உயர்ந்துள்ளது. யாருமே கணிக்க முடியாத நிலையில் தங்கம் விலை தினசரி ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது.வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 பைசா அதிகரித்து, ரூ.61.60 ஆகவும், கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.61,600க்கும் விற்கப்படுகிறது.