பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இதே சேனலில் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான கா தலி க்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சந்திரா.
மேலும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பிரஜின் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் இந்த சீரியலில் நடித்ததன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன் பின் இவர் தமிழில் கோலங்கள், மகள், சொந்தபந்தம், பாசமலர் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார்.
மேலும் 38 வயதில் நடிகை சந்திரா திருமணம் செய்துக் கொண்டது பரவலாக பேசப்பட்டது. சந்திரா, மலையாள சீரியலான ‘ஸ்வந்தம் சுஜாதா’ சீரியலில் நடிகர் டோஷூடன் இணைந்து நடித்தார். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் இணைந்து நடித்த கா தலி த்து வந்தனர். அதன் பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.
ரீல் ஜோடிகளான இவர்கள் ரியல் ஜோடிகளாக மாறினர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில் நடிகை சந்திரா லட்சுமணன் சில மாதங்களுக்கு முன் க ர்ப் பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இவர்க்ளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் இந்நிலையில் தற்போது சந்திரா – டோஷ் கிறிஸ்டி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் குழந்தை கையை பிடித்தப் படி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கும் சந்திரா ஆண் குழந்தை பிறந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
View this post on Instagram
;