என்ன ஒரு ஆ ச் சரி யம்… 41 ஆண்டுகளுக்கு பின் ஏலத்திற்கு போன ஒரு துண்டு பீஸ் கேக்… விலை எவ்வளவு தெரியுமா?? அப்படி என்ன ஸ்பெஷல் அதுல இருக்கு…!!

சினிமா

உலகில் நாட்டை ஆண்ட பிரிட்டன் மன்னரான சார்லஸ் மற்றும் ம றைந் த இளவரசி டயானா இருவரின் திருமணத்தின் போது தயார் செய்யப்பட்ட கேக் ஒன்றின் ஒரு பகுதி தற்போது ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சார்லஸ் மற்றும் டயானா ஆகிய இருவரின் திருமணம் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது.

மேலும் அந்த திருமணத்தில் சுமார் 3,000 பேருக்கு அதிகமான விருந்தினர்கள்  கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் விருந்தினராக நைஜல் ரிக்கட்ஸ் என்ற நபர் ஒருவர் கலந்து கொண்டிருந்தார். இவர்களது  திருமணத்தின் போது மொத்தம் 23 கேக்குகள் தயார் செய்யப்பட்டிருந்ததாம்.

அதுமட்டுமின்றி இதில் ஐந்து அடுக்குகள் மற்றும் ஐந்து அடி கொண்ட கேக் ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அந்த கேக்கின் ஒரு பகுதியை நைஜல் ரிக்கட்ஸ் பெற்றுக் கொண்டதாக கூறுகின்றன. அனால் கடந்த ஆண்டு நைஜல் ரிக்கட்ஸும் இ றந் து விட்டார். ஆனால் 41 ஆண்டுகளுக்கு முன் சார்லஸ் – டயானா திருமணத்தின் போது தயார் செய்யப்பட்ட கேக்கின் ஒரு பகுதியை இத்தனை ஆண்டுகள் நைஜல் ரிக்கட்ஸ் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த கேக் துண்டை இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனம் தற்போது ஏலத்தில் விட போவதாகவும் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 27,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.இந்த கேக் துண்டு தற்போது இந்திய மதிப்பில் சுமார் 15,000 ரூபாய்க்கு தான் ஏலம் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கு றைந் த விலைக்கு இந்த கேக் துண்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..