பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தை வைத்து மையமாக இருக்கும் நிலையில் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரம் முல்லை முதலில் நடிகை சித்ரா இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மேலும் அவரது மறைவிற்கு பின் காவ்யா அறிவுமணி இந்த கதாபாத்திரத்தில்நடித்து வருகிறார். தற்போது நடிகை காவ்யா அறிவுமணி இந்த சீரியலில் இருந்து வி லகு வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மனதில் எழுந்தது.
அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்து விட்டது. சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா தான் இனி புது முல்லையாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் சிப்பிக்குள் முத்து சீரியல் கடந்த வாரம் முடித்துள்ள நிலையில் நடிகை லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்..