எத்தனை கோடி செலவானாலும் ப ரவா யில்லை… எனக்கு அந்த நடிகை தான் ஜோடியாக வேணும்… என அடம் பிடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

சினிமா

தமிழ் சினிமாவில் தவிர்க்க மு டியாத நடிகராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து டான், சிங்கப்பாதை போன்ற படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அதனைத் தொடர்ந்து நேரடியாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதிக்கவுள்ளாராம் சிவகார்த்திகேயன். தெலுங்கில் கடந்த வருடம் வெறும் நாலு கோடி பட்ஜெட்டில் வெளியாகி சுமார் 60 கோடி வசூல் செய்த ஜாதி ரத்னலு என்ற படத்தை இயக்கிய அனுதீப் என்பவர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பல நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் க டைசி யாக சிவகார்த்திகேயன் ரஷ்மிகா மந்தனா நடித்தால் படத்தின் வியாபாரத்திற்கு சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்புக்கு ஐடியா கொடுத்துள்ளாராம்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையாக உள்ளார். அவருடைய சம்பளமே கிட்டத்தட்ட ஐந்து கோடியை தாண்டி விட்டது.

மேலும் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேசுகையில், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படியாவது ரஷ்மிகா மந்தனாவை படத்திற்குள் கொண்டு வந்து விடுங்கள். என படக் குழுவினருக்கு கட்டளை போட்டு விட்டாராம். அதன் காரணமாக தற்போது ரஷ்மிகாவின் கால்ஷீட்டுக்கு படக்குழு  கா த்துக் கொண்டிருக்கிறதாம்..