ஒருத்தன் நல்லது செஞ்சா பொறுக்காதே.. 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.. சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி “அம்மன் அய்யன்” ஹோட்டலில் வரித்துறையினர் ரைடு..

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. இவருக்கு சொந்தமான அம்மன் ஹோட்டல் மதுரையில் உள்ளது. இந்த ஹோட்டலை சூரின் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான விஜய் டிவி செல்ல மகன் என்றே சொல்லக்கூடிய சிவகார்த்திகேயன் தான் திறந்து வைத்துள்ளார்.

இந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலித்து வருவதாக கூறி மக்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி, வணிக வரி துறையினர் அம்மன் ஹோட்டலில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.ஒருத்தன் நல்லது செஞ்சா பொறுக்காதே.. 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.. சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி ஹோட்டலில் வரித்துறையினர் ரைடு..

நோட்டீஸ் அனுப்பிய வணிக வரி துறை நடந்த இந்த சோதனையில் உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது வணிக வரி துறை.