ஏன் பொண்ணும் பையனும் மட்டும் தான் லவ் பண்ணனுமா? வைரலாகும் பா.இரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது" டிரைலர் இதோ பாருங்க..!!

ஏன் பொண்ணும் பையனும் மட்டும் தான் லவ் பண்ணனுமா? வைரலாகும் பா.இரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” டிரைலர் இதோ பாருங்க..!!

சினிமா

பா.இரஞ்சித் அவர்களின் “நட்சத்திரம் நகர்கிறது” படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.படத்தின் ட்ரைலர் மிகவும் வைரலாகி வருகிறது.2M பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.ஏன் பொண்ணும் பையனும் மட்டும் தான் லவ் பண்ணனுமா? வைரலாகும் பா.இரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” டிரைலர் இதோ பாருங்க..!!

பா.இரஞ்சித் முதலில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன்முதலில்  கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.எதிர்பார்க்காத வெற்றி இந்த படத்தில் அவருக்கு கிடைத்தது என்றே சொல்லலாம்.அடுத்ததாக நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி அவர்களை வைத்த  “மெட்ராஸ்” படத்தை இயக்கினார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

சூப்பர்ஸ்டார் அவர்களை வைத்து இயக்குவது அவ்வளவு எளிதல்ல ஏனெனில் அவர் படங்களுக்கு எப்போதும் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.அதன்படி ரஜினியை வைத்து முதலில் கபாலி படத்தை இயக்கிய பா.இரஞ்சித், பின்னர் அவரை வைத்தே காலா படத்தையும் இயக்கி வெற்றிகண்டார். இதையடுத்து ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய அவர், அப்படத்தின் பாக்ஸிங் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றி பேசி பாராட்டுக்களை பெற்றார். இப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கும்  இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இதுதவிர கலையரசன், ஷபீர் உள்பட ஏராளமான இளம் நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நட்சத்திரம் நகர்கிறது படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதைகளைப் பற்றி இந்த டிரைலரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுதவிர ஈர்ப்பு பற்றியும் இதில் பேசி உள்ளனர். இதன்மூலம் பா.இரஞ்சித்தின் முந்தைய படங்கள் போல் இப்படமும் வெளியான பின் பரபரப்பாக பேசப்படும் என தெரிகிறது.வெற்றி தொடருமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.