பிரபல நடிகர் கார்த்திக்கின் இரண்டு மனைவிகளை பார்த்திருக்கிறீர்களா?? அக்கா, தங்கை என இருவரையும் திருமணம் செய்து கொண்ட கார்த்திக்!! புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்திக் . இவர் அந்த காலத்திலேயே  பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

மேலும் இந்த படத்திற்கு பிறகு நினைவெல்லாம் நித்யா, மௌனராகம் , ஆகாய கங்கை, நல்லதம்பி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா, பி ஸ்தா போன்ற படங்கள் காமெடிகளில் கலை கட்டியது.

சினிமாவில் சில ஆண்டுகள் படங்கள் நடிக்காமல் இருந்த கார்த்திக் அதன் பின் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015ல் வெளியான அனேகன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . தற்போது நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்த வரும் அந்தகன் படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

நடிகர் கார்த்திக் இரண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஆம் கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் இணைந்து படங்கள் நடித்துள்ளன. அதன் பின்  1992 ஆம் ஆண்டு ராகினியின் தங்கையான ரதியை இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அக்கா தங்கை என இருவரையுமே திருமணம் செய்து கொண்டார். இவரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் கையன் கார்த்திக் இரண்டு மகன்கள் உள்ளன. இவரின் மூத்த மகன் கௌதம் கார்த்திக் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வறுகளிறார்.

மேலும் இவரின் இரண்டாம்  மனைவிக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார். மொத்தம் நடிகர் கார்த்திக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தற்போது நடிகர் கார்த்திக் திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.