திரையுலகில் எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிகை, நடிகர்கள் நடித்து வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதன் முதலில் அட்ட கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் இவர் காக்க முட்டை திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மனதில் பிரபலமானார்.
மேலும் இவரது நடிப்பில் உருவான திரைப்படமான திட்டம் இரண்டு மற்றும் பூமிகா போன்ற இரண்டு படங்களுமே சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இவர் அடுத்ததாக முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜூனுடன் இணைந்து திரைப்படம் நடிக்கஉள்ளார்.
இவர் நடிக்கும் இந்த திரைப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்க இருக்கிறாராம். இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் அர்ஜுனை து ரத் தி து ரத் தி கா தலிக் கும் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த சின்ன வயசுல இவரு கூட ஜோடியா நடிக்கிறாரா என கமெண்ட் செய்து வருகின்றன..