தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. மேலும் இவர் சினிமாவில் நடிப்பைத் தாண்டி பல உ தவிகளை சமூகத்திற்கு செய்து வருகிறார். சினிமாவை பொறுத்தவரை எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்கள். அப்படி அறிமுகமான பல பேர் தற்போது ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
மேலும் அந்த வகையில் நடிகை மீனா சிறு வயதில் நடிகர் ரஜினி நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் அவர் ரஜினிக்கே ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படம் வெளியான பிறகு இந்த குழந்தைக்கு ரெண்டு வயது தான் ஆனது. ஆனால் ஆந்த குழந்தை தற்போது நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அந்த குழந்தை வேறு யாருமில்லை. சூரரை போற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்ணா பாலமுரளி தான். மலையாள சினிமாவில் திரையுலகில் அறிமுகமானார். இவர் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார். மேலும் 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படத்தில் அம்ரிதா உன்னி கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மலையாள திரையுலகில் இருந்து அவர் அடுத்ததாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி அந்தப் படத்தில் டூயட் பாடலுக்கு பாடி ஆடி இருந்தார். அதன் பிறகு தமிழில் ஒரு படம் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல் நடிகர் சூர்யா அறிமுகமான படம் நேருக்கு நேர் அப்படி பார்த்திருந்தால் அந்த படம் வெளியான பிறகு அபர்ணா பாலமுரளிக்கு வெறும் இரண்டு வயது தான் ஆனது. தற்போது இவர் சூர்யாவுக்கே ஜோடியாக நடித்துள்ளார். இந்த தகவல் தற்போது வை ரலா கி வருகிறது…